இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

In the last 24 hours alone, more than 37,000 people have been infected with corona in India, killing 481 people.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 481 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே சென்றாலும், புதியதாக பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 9,177,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 134,254 பேர் உயிரிழந்துள்ளனர். 8,603,575 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 37,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 481 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில்  439,893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற நாம் தொடர்ந்து சமூக இடைவெளிகளை பின்பற்றி, முக கவசம் அணிவதை வழக்கப்படுத்திக்கொள்வோம்.