மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.! பொதுமக்கள் போராட்டம்.!

இந்நிலையில், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண்களை ஆடைகளின்றி அழைத்துச் சென்ற கும்பலின் முக்கிய குற்றவாளி உட்பட 4 பேரை மணிப்பூர் காவல்துறை இதுவரை கைது

Manipur Protest

மணிப்பூரில் பெண்கள் ஆடைகளின்றி ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்திய சம்பவத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணிப்பூரில் இரு பிரிவினர்கள் இடையே கடந்த மே மாதம் தொடங்கிய கலவரமானது, நேற்று முன் தினம் வெளியான வீடியோ மூலம் அனைவரது பார்வைக்கும் வந்து நெஞ்சை பதறவைத்துள்ளது. அங்குள்ள நிலவரம் என்ன என அனைவரையும் பதைபதைக்க வைக்கும் அளவுக்கு அந்த வீடியோவில் இரு பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் அமைந்துள்ளது.

அதில், பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மாற்று சமூகத்தை சேர்ந்த ஒரு குழுவினர் ஆடைகளை அகற்றி இழுத்து செல்லும் கொடூரமான வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள் நீதி கேட்டு வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண்களை ஆடைகளின்றி அழைத்துச் சென்ற கும்பலின் முக்கிய குற்றவாளி உட்பட 4 பேரை மணிப்பூர் காவல்துறை இதுவரை கைது செய்துள்ளாது. மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.