#Hydrabad Election: ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக முன்னிலை!

The BJP has the upper hand in most constituencies. The ruling Telangana Rashtriya Samithi has been pushed to second place.

அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி  இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த விபரம் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மாநில சட்டசபை தேர்தலை போல, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலும் களைகட்டியது.

இந்த மாநகராட்சி தேர்தலில் 1,222 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த தேர்தலில், அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி  இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.