மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, நான் காந்தி என தகுதிநீக்கத்திற்கு பிறகு ராகுல்காந்தி ஆவேச பேட்டி அளித்துள்ளர்.
2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது.
2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றய தினம் ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் காந்தி பேட்டி:
இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வருகிறார். அப்போது பேசிய அவர், நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன். இதற்கான உதாரணங்களை தினம் தினம் பார்த்து வருகிறோம்.
எனக்கு பயம் இல்லை:
இந்திய ஜனநாயகத்திற்காக நான் போராடி வருகிறேன், சிறை தண்டனை, தகுதி நீக்கத்தை பார்த்து ஒருபோதும் நான் பயப்பட மாட்டேன். என்னைப் பற்றி இவர்களுக்கு இன்னும் சரியாக புரியவில்லை. பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டேன். அப்போது, அதானி பற்றி நான் பேசுவதை கண்டு பிரதமர் மோடி பயப்படுவதை அவரது கண்களில் பார்க்கின்றேன்
நான் சாவர்க்கர் அல்ல:
“மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல… நான் காந்தி” என்று தகுதி நீக்கத்திற்கு பிறகு ராகுல்காந்தி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இதற்கு முன்னர், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.