ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவரதீபக்கை கைது செய்த சிபிஐ.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் பதவியில் இருந்த போது, வீடியோகான் குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி ரூ.3,250 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவரது கணவர் தீபக் கோச்சர் பயன்பெற்றதாக புகார்கள் எழுந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி இது தொடர்பாக கடந்த மே மாதம் 2018 ஆம் ஆண்டு விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில், குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து, சந்தா கோச்சாரை பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து அமலாக்கதுறையினர் மற்றும் சிபிஐ சாந்தா மற்றும் அவரது கணவர் தீபக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் சாந்தா மற்றும் தீபக் வசம் இருந்த ரூ.78 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
மேலும் இந்த வழக்கில் இருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது இது தொடர்பாக வெளியாகி உள்ள முதல் கட்ட தகவலில் இருவரும் விசாரணை குழுவுக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.