சட்டவிரோத மணல் கடத்தல் கும்பலை தடுக்கச் சென்ற பெண் அதிகாரியை அந்த கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தின் பிஹ்தா நகரில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சுரங்கத்துறைக்கு தெரிய வந்த நிலையில், சுரங்கத்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் அந்த சம்பவ இடத்துக்குச் சோதனை நடத்துவதற்காக சென்றுள்ளார்.
அந்த பெண் அதிகாரி அங்கு வந்ததை பார்த்த மணல் அள்ளிக்கொண்டிருந்த நபர் பலரும் ஒன்றுகூடி பெண் அதிகாரியைக் இழுத்து சென்று கற்களால் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
unknown nodeமேலும், வீடியோ வைரலானதை தொடர்ந்து பாட்னா மாவட்டத்தின் எஸ்பி ராஜேஷ் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் பேசியதாவது ” அப்பகுதியில் மணல் அள்ளுவது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாவட்ட சுரங்க அதிகாரி ஒருவரை சமூக விரோதிகள் தாக்கினர். இதில் 44 பேர் கைது செய்யப்பட்டனர், மாவட்ட சுரங்க அதிகாரி மற்றும் இரண்டு சுரங்க ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.