8 மாநிலங்களில் 85% கொரோனா பாதிப்பும் 87% இறப்புகள் – மத்திய சுகாதாரதுறை

8 மாநிலங்களில் 85% கொரோனாவால் பாதித்தவர்களும் 87% இறப்புகள் விகிதம் உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, தெலுங்கானா,

8 மாநிலங்களில் 85% கொரோனாவால் பாதித்தவர்களும் 87% இறப்புகள் விகிதம் உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, தெலுங்கானா, குஜராத், உத்தரபிரதேசம், ஆந்திரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதித்தவரின் விகிதம் 85.5% இந்தியாவில் கொரோனா நோயால் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் விகிதம் 87 % உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களுக்கு கொரோனா தொற்று கட்டுப்படுத்த பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் ஒரு மூத்த இணை செயலாளர் நிலை அதிகாரி ஆகியோரைக் கொண்ட GOM 15 மத்திய

குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

unknown node

இந்நிலையில் நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சகம் வைரஸ் பாதிப்பானது நேற்று 18,552 ஆகவும்,384 பேர் பலியாகியுள்ளதாகவும்,10,244 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் இதுவரை இத்தொற்றுக்கு மொத்தம் 15,685 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 2,95,881 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.