மீண்டும் குறையும் தினசரி கொரோனா பாதிப்பு.....ஒரே நாளில் 41,526 பேர் குணமடைவு...!

In India, 41,506 people have been newly infected with corona in the last 24 hours

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,506 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 895 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  3,08,37,222 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 41,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட  ஆயிரம் குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,08,37,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 895 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,08,040 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 41,526 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,99,75,064 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,54,118 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 37,60,32,586 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக,கடந்த 24 மணி நேரத்தில் 37,23,367 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.