இன்று ஒரே நாளில் 3,693 பேருக்கு கொரோனா மேலும் 115 பேர் உயிரிழப்பு.
கர்நாடகா மாநிலத்தில் இன்று ஒரே 3,693 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,115 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஒரே நாளில் 3,693 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,115 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் மேலும் இதுவரை இல்லாத அளவில் இன்று 115 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1147 அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஒரே நாளில் 1,028 பேர் குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 20,757 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 33,205 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
unknown node