இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 260 பேர் இறப்பு;26,032 பேர் குணமடைவு..!

In the last 24 hours, 260 people have died due to corona in India; 26,032 people have recovered ..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,326 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 260 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,36,52,745 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 28,326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1300 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,36,52,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 260 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,46,918 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 26,032 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,29,02,351 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,03,476 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 85,60,81,527 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 68,42,786 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.