உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப் படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,298 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று 6,422என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,748 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5,916 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,273 பேர் ஆக உள்ளது.
இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,47,756 ஆக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 2,16,17,78,020 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 19,61,896 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.