கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 138 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்.! மத்திய அரசு அறிவிப்பு.!

மூன்றாண்டுகளில் ரூ.138 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தகவல்.

மூன்றாண்டுகளில் ரூ.138 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தகவல்.

கடந்த 2019 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ரூ.137.96 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய தரவுகளில் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 மற்றும் ரூ.500 மதிப்பிலான கள்ள நோட்டுகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தரவுகளில் தெரியவந்துள்ளது. 2021-ஆம் ஆண்டில், கைப்பற்றப்பட்ட ரூ.2,000 மதிப்புள்ள கள்ள நோட்டுகளின் முகமதிப்பு ரூ.4.84 கோடியாக உள்ளது.