2 மாநிலங்களில் இழுபறி..!பெரும்பான்மை இல்லாமல் தவிக்கும் காங்கிரஸ் மற்றும் பாஜக...!

சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இதுவரை பெரும்பான்மை கிடைக்கவில்லை.

சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது.

இன்று  காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மத்திய பிரதேசம் முன்னணி நிலவரம்:

காங்கிரஸ் : 104

பாஜக: 96

பி.பகுஜன் சமாஜ் கட்சி  -6

மற்றவை: 05

மத்தியப்பிரதேசம் மொத்த தொகுதிகள் 230 ஆகும். ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

ராஜஸ்தான் முன்னணி நிலவரம்:

காங்கிரஸ் -95 –பாஜக -80 –மற்ற கட்சிகள் -24

மொத்தம் 199 தொகுதிகள் கொண்ட அந்த இடத்தில் ஆட்சியை பிடிக்க 100 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்று இருக்க வேண்டும்

ஆனால்  மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இதுவரை பெரும்பான்மை கிடைக்கவில்லை.