மேற்கு வங்கத்தில் சத்துணவில் பாம்பு.! 30 பள்ளி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.!

மேற்கு வங்கத்தில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பாம்பு இருந்த காரணத்தால் 30 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பாம்பு இருந்த காரணத்தால் 30 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் எனும் மாவட்டத்தில் மதிய உணவு சமைக்கும் போது அதில் பருப்பு கொள்கலனில் தவறுதலாக பாம்பு ஒன்று உள்ளே இருந்துள்ளது. இதனை கவனிக்காமல், சத்துணவு ஊழியர்கள் பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறியுள்ளனர்.

இந்த சத்துணவை சாப்பிட்ட பள்ளி குழந்தைகளில் 30 குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். இந்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கி அவரது வாகனத்தையும் சேதப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.