அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசிக்கு இந்தியா அடுத்த வாரத்திற்குள் ஒப்புதல் அளிக்கும்!

increased coronavirus situation, India is expected to approve the AstraZeneca Covit-19 vaccine within the next week.

அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசிக்கு இந்தியா அடுத்த வாரத்திற்குள் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஒரு வருட காலமாக உலக மக்கள் முழுவதும் அச்சமடைந்து வாழ்வதற்கு காரணமான கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் தனது வீரியத்தை சற்றே குறைத்து உள்ளது என்றே கூறலாம். நாளுக்கு ஒரு லட்சம் பேர் புதிதாக பாதிப்பு ஏற்பட்ட இடத்தில், தற்போது 30 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதிய தொற்றுகள் இருந்தாலும் முந்தைய நாட்களில் பாதிப்புகள் குறைந்து உள்ளது என்றுதான் கூறியாக வேண்டும். இந்நிலையில் ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனாவிற்க்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் வெகு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கக்கூடிய அஸ்ட்ராசெனெகா  கொரானா வைரஸ் தடுப்பூசி அதன் உற்பத்தியாளர்களின் சரியான செயல்பாட்டின் அறிக்கை சமர்ப்பித்த பிறகு இந்தியா அடுத்த வாரத்திற்குள் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் தடுப்பூசியான அஸ்ட்ராசெனெகாவை அங்கீகரிக்கக் கூடிய முதல் நாடாக இந்தியா இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் பட்சத்தில், தற்பொழுது கொரானா வைரஸ் பரவலிலும் இரண்டாவது நாடாக இருக்கிறது. எனவே அடுத்த மாதத்திற்குள் தனது குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதை இந்தியா துவங்க வாய்ப்புள்ளதாகவும் அஸ்ட்ராசெனெகா மட்டுமல்லாமல் பைசர் இன்க் மற்றும் உள்ளூர் நிறுவனமாகிய பாரத் பயோடெக் தயாரிக்கக்கூடிய தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான விண்ணப்பங்களையும் இந்தியா பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.