உலக அளவில் இந்தியா விரைவில் இரண்டாவது இடத்தை நெருங்கும் என கணிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இந்தியா உலகளவில் நாளுக்கு நாள் அதிகரிக்கக்கூடிய பட்டியலில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து கொண்டே செல்கிறது. அமெரிக்காவை விட இந்தியா நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. விரைவில் பிரேசிலை தாண்டி இந்தியா இரண்டாவது இடத்திற்கு வரும் என கணிப்புகள் கூறப்படுகிறது.