ஸ்ரீநகர், லடாக்கும் எங்கள் நாட்டில் உள்ள ஒரு பகுதி தான் என ஜி20 மாநாடு கூட்டம் குறித்து பாகிஸ்தான் விமர்சனத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த நவம்பர் 30வரையில் இந்தோனீசியா வசம் இருந்த ஜி20 தலைமை பொறுப்பானது டிசம்பர் 1 முதல் அடுத்த ஓராண்டிற்கு (நவம்பர் 30, 2023 வரையில்) இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அடுத்து இந்தியாவின் பல்வேறு இடங்களில் பல்வேறு துறைகள் குறித்து ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது.
ஜி20 மாநாடு :
unknown nodeஜி20 மாநாடானது, நாடு முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளின் கீழ் சுமார் 200 ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறது. இதில் ஜி20யில் இருக்கும், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, யு.கே., அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அந்தந்த துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.
லடாக் – ஸ்ரீநகர் :
unknown nodeஇதில், மே மாதம் சுற்றுலாத்துறை குறித்த ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டமானது, ஸ்ரீநகரில் நடைபெற உள்ளது. அதே போல, இளைஞர்களின் நலன் சார்ந்த ஆலோசனை கூட்டமானது, இந்த மாத (ஏப்ரல்) இறுதியில் லடாக்கில் உள்ள லேவில் நடைபெற உள்ளது. ஜம்மு – காஷ்மீர், லடாக்கில் நடத்தப்படும் இந்த ஜி20 கூட்டத்திற்கு பாகிஸ்தான் அரசு தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
பாகிஸ்தான் விமர்சனம் :
unknown nodeஜம்மு – காஷ்மீர், லடாக்கில் நடத்தப்படும் இந்த ஜி20 கூட்டம் பற்றி பாகிஸ்தான் அரசு கூறுகையில், இந்தியாவின் இந்த முடிவானது ஓர் பொறுப்பற்ற நடவடிக்கை எனவும், இந்தியாவின் சமீபத்திய சுயநல நடவடிக்கை எனவும் கடுமையாக விமர்சித்துள்ளது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா, பாகிஸ்தானில் நடத்திய பதில் தாக்குதல், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அதிகாரங்களை (சிறப்பு அதிகாரம் 370) ரத்து செய்தது, உள்ளிட்ட இந்திய அரசின் நடவடிக்கைகளில் இருந்து பாகிஸ்தான் நாட்டு உறவில் சிறு உரசல் இருந்து வருகிறது என்றே கூறலாம்.
இந்தியா பதிலடி :
unknown nodeபாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகத்தின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுதுறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இதில், ஜி20 கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஸ்ரீநகர் மற்றும் லடாக் ஆகிய இடங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதால் அங்கு கூட்டங்கள் நடத்தப்படுவது இயல்பானது தான் என்றும், நாங்கள் எல்லா இடங்களிலும் இந்த கூட்டங்களை நடத்துவோம் என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.