இந்திய ஓவிய கலைஞரின் அன்புப் பரிசு..

நடிகை மேகன் மார்க்கலை இளவரசர் ஹாரி மணந்துக் கொண்ட நிகழ்ச்சியை அமிர்தசரஸை சேர்ந்த ஓவியர் ஒருவர் சித்திரங்களாக வடித்துள்ளார்.

நடிகை மேகன் மார்க்கலை இளவரசர் ஹாரி மணந்துக் கொண்ட நிகழ்ச்சியை அமிர்தசரஸை சேர்ந்த ஓவியர் ஒருவர் சித்திரங்களாக வடித்துள்ளார்.

unknown node

இங்கிலாந்து இளவரசர் ஹாரி – மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஹாரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ், மணமகள் மெர்கலுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக மெர்கலின் தந்தை, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார். எனவே, மெர்கலின் வேண்டுகோளை ஏற்று சார்லஸ், அவருக்கும் தந்தை இடத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைக்க இருக்கிறார்.

36 வயதாகும் மெர்கல் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை ஆவார். ஹாரிக்கு 33 வயதாகிறது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் ஹாரியின் தாத்தாவான இளவரசர் பிலிப் (96) பங்கேற்பார் என்று பக்ஹிங்காம் அரண்மனை உறுதி செய்துள்ளது. இடுப்பில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பிலிப், இப்போது அதில் இருந்து மீண்டு வருகிறார்.

பாலிவுட் நட்சத்திரங்களை சித்திரம் தீட்டி புகழ் பெற்றவரான ஜக்ஜோத்சிங், இளவரசருக்கு திருமணப் பரிசு அளிக்க இந்த சித்திரங்களைத் தீட்டியதாக தெரிவித்தார்.