இந்திய எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க மற்றும் இருமுனைகளில் இருந்து வரும் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க ஏதுவாக நவீன வசதி கொண்ட MiG-29 ரக போர் விமானம் ஸ்ரீநகர் விமானப் படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான தளத்தில், மேம்படுத்தப்பட்ட MiG-29 போர் விமானங்களை இந்தியா நிலை நிறுத்தியுள்ளது. மேலும், வரும் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தொடர் கண்காணிப்புப் பணியில் MiG-29 போர் விமானம் ஈடுபட உள்ளது.
இந்திய எல்லையில் ‘வடக்கின் பாதுகாவலர்’ என்றும் அழைக்கப்படும் ட்ரைடென்ட்ஸ் படைப்பிரிவு, ஸ்ரீநகர் விமான தளத்தில் உள்ள மிக்-21 படைப்பிரிவுக்குப் பதிலாக, எல்லை நாடுகளின் அச்சுறுத்தலைக் கவனித்துக்கொள்ள் மிக்-29 போர் விமானங்க ள் நிலைநிறுத்தபட்டுள்ளது. இதில், மிக நீண்ட தூர வான்-விமான ஏவுகணைகள் மற்றும் வான் -தரை ஆயுதங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் கல்வான் மோதலுக்குப் பிறகு சீனத் தரப்பிலிருந்து வரும் அச்சுறுத்தலைச் சமாளிக்க லடாக் பகுதியில் நிறுத்தப்பட்ட முதல் விமானம் மிக்-29 ஆகும். MiG-29 விமானங்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீநகர் விமான தளத்திற்கு மாற்றப்பட்டு, லடாக் பகுதியின் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பரவலாக பறந்தன. அங்குள்ள சீனர்கள் ஏதேனும் வான்வெளி மீறல்களில் ஈடுபடுகிறார்களா என கவனித்து வருகிறது.
