மும்பை கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
நேற்றைய தினம் ஹோலி பண்டிகை விடுமுறை முடிந்து இன்று வழக்கம் போல இந்திய கடற்படையினர் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று மும்பை கடற்கரையில் இந்திய கடற்படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது ராணுவ ஹெலிகாப்டர் மும்பை கடற்கரை பகுதியில் விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து உடனடியாக மீட்புக்குழுவினர் விரைந்து நடவடிக்கை எடுத்து ஹெலிகாப்டரில் பயணித்த 3 பேரை பத்திரமாக மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாநில மீட்புப்படையினரும் வரலவழைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் எவ்வாறு எதனால் நடைபெற்றது என ஆராய உயர்மட்ட குழு ஆராய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.