மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 42 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்த நல்ல செய்தி விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது விரைவில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமானது தற்போது ரூ.18,000ஆக உள்ளது.அந்த தொகை ரூ.26,000ஆக உயர வாய்ப்புள்ளது என்றும், அதே போல மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைபடி 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
புதிய திருத்தம் :
அகவிலைப்படியானது, ஆண்டிற்கு இரண்டு முறை , ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தும் செய்ப்படும். அந்த வகையில் வரும் ஜூலை மாதம் இந்த புதிய திருத்தும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணியில் இருப்பவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.
42 சதவீத அகவிலைப்படி :
மத்திய அரசு அகவிலைப்படி உயர்த்தும் கணக்கீட்டின் படி, கடந்த 12 மாதங்களின் சராசரி CPI-IW தற்போது 372.2 புள்ளியாக உள்ளது. அதனை பின்பற்றினால், அகவிலைப்படியானது 42.37 சதவீதமாக கணக்கீடு கொள்ளப்படுகிறது. எனவே, மத்திய அரசு மார்ச் 31-ம் தேதி அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்த அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
38 சதவீத அகவிலைப்படி :
அகவிலைப்படி உயர்வானது ஜனவரி 1, 2023 முதல் கணக்கீடு கொள்ளப்பட்டு அமலுக்கு வரும். தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 38 சதவீத அகவிலைப்படியைப் பெற்று வருகின்றனர். செப்டம்பர் 28, 2022 அன்று அகவிலைப்படியானது கடைசியாக திருத்தம் செய்யப்பட்டு ஜூலை 1, 2022 முதல் கணக்கீடு செய்யப்பட்டு அமலுக்கு வந்தது. விலைவாசி உயர்வை ஈடுகட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலுவை தொகை சாத்தியமில்லை :
கோவிட் -19 தொற்றுநோய்களின் போது நிறுத்தப்பட்டு இருந்த 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வெளியிடுவது சாத்தியமில்லை என்று மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.