டிசம்பர் 15 முதல் மீண்டும் தொடங்குகிறது சர்வதேச விமான போக்குவரத்து ...!

The Ministry of Civil Aviation has announced that international flights will resume from December 15.

டிசம்பர் 15 முதல் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குகிறது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இருப்பினும் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக பல கட்டுப்பாடுகளுடன் இருபத்தி எட்டு நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகரீதியான சர்வதேச விமான போக்குவரத்தை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இயக்குவது குறித்து மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.