மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு பிரிவினர்களுக்கு இடையியே ஏற்பட்ட கலவரம் காரணமாக இணைய சேவை முடக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது அதற்கு விலக்கு அளிக்கப்பட்டு, குறிப்பிட்ட நிபந்தனைகளோடு இணைய சேவை மணிப்பூரில் மீண்டும் துவங்கியுள்ளது.
செல்போனில் இணைய சேவை பயன்படுத்த முடியாது. பிராட்பேண்ட் சேவை மட்டுமே பயன்படுத்த முடியும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளோடு மணிப்பூர் மாநில அரசு இணைய சேவையை துவங்கியுள்ளது.
