ரூபாய் நோட்டு கிழிந்து விட்டதா ....? கவலைய விடுங்க, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இதோ...!

The Reserve Bank has announced that if the rupee note is torn, the public can now exchange it in any form.

ரூபாய் நோட்டு கிழிந்து விட்டால் பொதுமக்கள் இனி எந்த வகையிலும் மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பொதுவாக ரூபாய் நோட்டுகள் கிழிந்து விட்டால் அல்லது கடையில் கொடுத்து மாற்ற முடியாத சூழ்நிலையில் இருந்தால் அந்த ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை இதுவரை இருந்தது. எனவே மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள மக்கள் மட்டுமே ரூபாய் நோட்டுகளை எளிதில் மாற்றிக் கொள்ள முடிந்தது.

ஆனால் கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய மக்கள் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத சூழ்நிலை தொடர்ந்தது. இந்நிலையில் தற்பொழுது இது போன்று கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்வதற்கான அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் கையில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை உங்கள் பகுதிக்கு அருகே இருக்கக்கூடிய எந்த வங்கியிலும் கொடுத்து இனி மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்பொழுது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.