மணமகள் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சென்றது போல சந்திராயன் பூமியை விட்டு சென்றது!

கடந்தமாதம் ஜூலை 22ஆம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஸ்ரீகரிக்கோட்டாவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்த சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்பட்டது.
இது ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை [பூமியின் வட்டப்பாதையில் சுற்றி அதன் பிறகு நிலவின் வட்டப்பாதையை சென்றடையும். அந்த வகையில் இன்று பூமியின் வட்டப்பாதையில் இருந்து முழுவதுமாக வெளியேறி தற்போது நிலவின் வட்டப்பாதையை சுற்றி வருகிறது.
இது குறித்து, இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, ‘ இதுவரை திட்டமிட்டபடி வெற்றிகரமாக சந்திராயன் 2 விண்கலம் முன்னேறியுள்ளது. மணமகள் தன தாய் வீட்டில் இருந்து, மணமகன் வீட்டிற்கு சென்றது போல பூமியை விட்டு தற்போது நிலவின் சுற்று பாதையில் சுற்றி வருகிறது. நாளை முதல் சில நாட்களுக்கு 4 முக்கிய மாற்றம் நிகழும் எனவும் தெரிவித்தார்,
மேலும் செப்டம்பர் 7ஆம் தேதி, நள்ளிரவு 1.55 மணிக்கு சந்திராயன் 2 விண்கலம் நிலவில் தரை இறங்க உள்ளது.என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025