ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி!

நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மொத்தமுள்ள 175 தொகுதிகளில், 151

நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, மொத்தமுள்ள 175 தொகுதிகளில், 151 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து, விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி நகராட்சி மைதானத்தில், இவரது பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 12 மணியளவில், ஆந்திர ஆளுநர் நரசிம்மன், ஜெகன் மோகன் ரெட்டிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இவரது பதவியேற்பு விழாவில், இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மத தலைவர்களின் பிரார்த்தனை நடைபெற்றது. மேலும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பல்லாயிரக்கணக்கான தொடர்கள் கூடி கோஷங்களை எழுப்பி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.