நேதாஜியின் பிறந்த தினத்தையொட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வரும் விழாவில் உரையாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி பேச மறுத்துவிட்டார்.
இன்று நாடு முழுவதும் நேதாஜியின் பிறந்த நாள் 125-வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்படுகிறது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் விக்டோரியா ஹால் வெளியே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேச தொடங்கியபோது, அங்குள்ள சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டதால், கோபமடைந்த முதல்வர் மம்தா மேடையில் பேச மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து பேசிய அவர், இது அரசியல் நிகழ்ச்சி அல்ல, அரசு நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சியில் கண்ணியம் இருக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு ஒருவரை அழைத்துவிட்டு அவரை அவமதிப்பது சரியல்ல என குற்றசாட்டியுள்ளார்.
unknown node