ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் சிஆர்பிஎஃப் வீரர் வீரமரணம்!! சிஆர்பிஎஃப் வீரர்கள் சிலர் படுகாயம்

Jammu and Kashmir - CRPF player with gunfire with terrorists Some CRPF players are injured jammu kashmeeril payankaravaathikaludanaana thuppaki sandaiyil seeaarpief veerar maranam

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் சிஆர்பிஎஃப் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வந்தது.

இந்தியா பதிலடி:

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலை  மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் உள்ள இடங்களுக்கு சென்றது.சரியாக அதிகாலை 3.30 மணிக்கு மேல் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.

பின்னர் பிப்ரவரி 27-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் F16 என்று போர் ரக விமானத்தில் தாக்குதல் நடத்த வந்தது இதை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

ஆனால் அந்த தாக்குதலின்போது மிக் 21 போர் விமானத்தை காணவில்லை.அதேபோல் விமானியையும் காணவில்லை .

.பாகிஸ்தானிடம் இது தொடர்பாக கேட்டபோது,  விமானி அபிநந்தன் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் சொல்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.பலகட்ட முயற்சிக்கு பின்னர் விமானி அபிநந்தன் இன்று இந்தியா வந்தடைந்தார்.

இந்நிலையில் ஜம்மு – காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் சிஆர்பிஎஃப் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.  பயங்கரவாதிகளுடனான தொடர் துப்பாக்கிச் சண்டையில் சில  சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்த சம்பவம் மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ள்ளது.