ஜம்மு காஷ்மீர் எண்கவுண்டர் : 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை!

Two terrorists have been shot dead in an encounter with security forces in Jammu and Kashmir.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய எண்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு -காஷ்மீர் மாநிலம் பந்திபோராவின் வாட்னிரா எனும் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்பொழுது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பொழுது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.