ஜம்மு காஷ்மீர் : 2 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை!

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிசூடு சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ராணிபோரா பகுதியில் உள்ள குவாரிகத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய பாதுகாப்பு படை பதிலடி கொடுத்தன. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளம் மற்றும் தொடர்பு குறித்து உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது என்று பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025