கொரோனாவில் இருந்து குணமடைந்த ஜார்க்கண்ட் அமைச்சர் காலமானார்.!

ஜார்க்கண்ட் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஹாஜி உசேன் அன்சாரி ராஞ்சியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் இன்று காலமானார் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

ஜார்க்கண்ட் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஹாஜி உசேன் அன்சாரி ராஞ்சியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் இன்று காலமானார் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் அமைச்சர் அன்சாரி கொரோனா பாதிப்பால் இரண்டு வாரங்களுக்கு முன்பு மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று குணமடைந்தார். மேலும், அவருக்கு இருதய பிரச்சனை காரணமாக அவர் இன்று மாலை இறந்தார். அன்சாரியின் குடும்பத்தினர் இது குறித்து கூறுகையில், சமீபத்தில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததாக தெரிவித்தனர்.

இந்நிலையில், அமைச்சரின் மறைவுக்கு மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இதற்கிடையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று ஜார்க்கண்ட் அமைச்சர்கள் குணமாகியுள்ளனர்.