#JustNow: இன்று முதல் அமல்.. சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகை உயர்வு!

Default Image

புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் தொகை ரூ.750 உயர்வு இன்று முதல் அமல்.

புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் தொகை ரூ.750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான விலையில் சமீபத்திய திருத்தம் மூலம், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் இன்று (ஜூன் 16) முதல் புதிய உள்நாட்டு எல்பிஜி இணைப்புகளுக்கான பாதுகாப்பு வைப்புத் தொகையை ரூ.750 உயர்த்தியுள்ளன.

இதனால், 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரைப் பெறுவதற்கு டெபாசிட் தொகை (security deposit) ரூ.1,450 ஆக இருந்த நிலையில், ரூ.750 உயர்வு மூலம் இனி ரூ.2200 செலுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேபோன்று, புதிய சிலிண்டர் இணைப்பு எடுக்கும் போது இரண்டு சிலிண்டர்கள் எடுக்க வாடிக்கையாளர்கள் ரூ.4,400 செக்யூரிட்டி டெபாசிட் செய்ய வேண்டும்.  அதாவது வாடிக்கையாளர்கள் தலா 14.2 கிலோ எடையுள்ள இரண்டு சிலிண்டர்களை எடுத்தால் கூடுதலாக ரூ.1500 செலுத்த வேண்டும்.

5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகையும், ரூ.800 லிருந்து ரூ.1,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்று, எல்பிஜி விலைக்கு கூடுதலாக, எரிவாயு ரெகுலேட்டரின் விலையும் உயர்ந்துள்ளது. எரிவாயு சிலிண்டர் ரெகுலேட்டரின் (regulator) விலையும் ரூ.150 இருந்து ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒவ்வொரு புதிய இணைப்புக்கும் வரும் பைப் மற்றும் பாஸ்புக்கிற்கு ரூ.150 மற்றும் ரூ.25 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி நுகர்வு ஜூன் 2019 தேவையை விட 28.1% அதிகமாகவும், மே 2022 இல் 1.03 மில்லியன் டன்களை விட 2.9% அதிகமாகவும் இருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்