ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 50% விமானங்களை மட்டுமே இயக்க மத்திய விமான போக்குவரத்துக்கு இயக்குநரகம் அனுமதி.
ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய விமான போக்குவரத்துக்கு இயக்குநரகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50% விமான சேவையை மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வானத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது உள்ளே திடீரென புகை வந்தது, சரியான நேரத்திற்கு தரையிறங்க முடியவில்லை, கிளம்பவில்லை என பயணிகள் ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமான சேவை மீது பல்வேறு புகார்களை தொடர்ந்து தெரிவித்த நிலையில், புதிய கட்டுப்பாடுகளை விதித்து டி.ஜி.சி.ஏ. உத்தரவிட்டுள்ளது.
unknown node