கேரளாவில் கொரோனவை எதிர்கொள்ள அரசு 20,000 கோடி ரூபாய் நிதி தொகுப்பை தற்போது அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற கேரள சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடதுசாரி ஜனநாயக முன்னணி. இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பொறுப்பேற்ற பினராயி விஜயன் கேரளாவில் கொரோனா தடுப்பு பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். இதை தொடர்ந்து கேரளவில் சட்டசபை கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் ஆரம்பமானது.
அதன்படி, இன்று காலை சட்டமன்றம் கூடியது. இதில் புதிய அரசின் பட்ஜெட் தொகை தாக்கல் செய்யப்பட்டது. இதை தற்போதைய கேரள அரசின் நிதி அமைச்சர் பாலகோபால் தாக்கல் செய்துள்ளார். அப்போது பேசிய நிதி அமைச்சர், கொரோனா முதல் அலையின் தொடக்கத்தில் ரூ.20,000 கோடி நிதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை அடுத்து தற்போது கொரோனா இரண்டாம் அலை கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியில் ரூ.2,800 கோடியை சுகாதார அவசர தேவைகளுக்கும், ரூ.8,900 கோடியை மக்களுக்கு நேரடியாக வழங்குவதற்கும், ரூ.8,300 கோடியை வட்டி மானியங்கள் மற்றும் கடன்கள் ஆகியவற்றை சரி செய்யும் பொருட்டும் இந்த நிதியை ஒதுக்கியுள்ளனர். மேலும், ரூ.1,000 கோடியை 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கும், ரூ.500 கோடியை கொரோனா தடுப்பூசி உபகரணங்களுக்காகவும் ஒதுக்கியுள்ளனர்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…