கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று தொடக்கம்.!

கேரளாவில் தொடங்கப்பட இருக்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.

கேரளாவில் தொடங்கப்பட இருக்கும் முதல் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.

ஏப்ரல் 25-ம் தேதி திருவனந்தபுரத்தில் கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து திறந்து வைக்கிறார். இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மணிக்கு 180 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த ரயில் ஏப்ரல் 14-ம் தேதி கேரளாவுக்கு வந்து. ஏப்ரல் 22-ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்றே அதன் சோதனை ஓட்டம் தொடங்கியது.

‘யுவம்’ என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கேரளாவுக்கு வருகை தரும் போது, இந்த திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க இருகிறார் .

இந்த ரயில் இரு முனைய நிலையங்களுக்கும் இடையிலான 501 தூரத்தை 7.5 மணி நேரத்தில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், கோழிக்கோடு ஆகிய இடங்களில் நின்று செல்லும் எனத் தெரிகிறது. இருப்பினும், தற்போது மத்திய ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.