உணவு பொருள்களை திருடியதாக கூறி கேரளாவை சேர்ந்த மது என்ற மலைவாழ் வாலிபரை அடித்து கொலை செய்தது ஒரு கும்பல்.
இந்த சம்பவம் தொடர்பாக அட்டப்பாடி போலீசார் வழக்குப்பதிவுசெய்துள்ளனர். மது, போலீசாரிடம் கூறிய கடைசி வார்த்தைகளை பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தயாரித்தனர். இதில் முதல் கட்டமாக முக்காலி பகுதியைச் சேர்ந்த உசேன், உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், உசேன், கரீம் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆதிவாசி வாலிபர் மது கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார். நாகரீக சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்களுக்கு இடமில்லை. இது கேரளாவிற்கு அவமானம். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
unknown node