60 ஆண்டுகளுக்கு பிறகு...இன்று இந்தியா வருகிறார் கம்போடியா மன்னர்.!

கம்போடியா மன்னர் நாரோடம் சிஹாமோனி, 3 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு இன்று பிற்பகல் புதுடெல்லி வருகிறார். கம்போடியா மன்னர் ஒருவர், இந்தியா வருவது கடந்த 60

Norodom Sihamoni

கம்போடியா மன்னர் நாரோடம் சிஹாமோனி, 3 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு இன்று பிற்பகல் புதுடெல்லி வருகிறார். கம்போடியா மன்னர் ஒருவர், இந்தியா வருவது கடந்த 60 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

கடைசியாக 1963ம் ஆண்டு தற்போதைய மன்னரின் தந்தையான மன்னர் நாரோடம் சிஹானோக் இந்தியா வந்தார். தற்போத, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பின்பேரில், மன்னர் நாரோடம் சிஹாமோனி இந்தியா வருகிறார்.

ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் மன்னர் நாளை இருதரப்பு சந்திப்புகளை நடத்துகிறார். நாளை காலை ராஷ்டிரபதி பவனில் அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும், அதைத் தொடர்ந்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார்.