பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் இன்று தனது வாக்கை செலுத்த வந்தார் அப்போது அவரது கார் அருகே போட்டோ கிராபர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது ஒரு பத்திரிகையாளரை பிரதாப்பின் பாதுகாவலர்கள் தாக்கினர். இதனை பலரும் விடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர்.
இதற்க்கு விளக்கம் அளித்த தேஜ் பிரதாப், ‘நான் வாக்களித்துவிட்டுட்டு வெளியே வருகையில் பத்திரிகையாளர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். அப்போது ஒரு பத்திரிகையாளர் எனது காரின் கண்ணாடியை உடைத்துவிட்டனர். அதில் இருந்த கண்ணாடி துகள் எனது பாதுகாவலர் மீது பட்டு விட்டது. இது கொலை முயற்சியாகும்.’ என தெரிவித்தார். இவர் பீகாரில் எம்பி ஆகவும் இருந்துள்ளார்.
DINASUVADU