ஹிமாச்சலப்பிரதேசத்தில் நிலச்சரிவு..!-புதைக்குழிகளில் பலர் சிக்கிய அபாயம்..!

ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் புதைக்குழிகளில் பலர் சிக்கியிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் இன்று மதியம் 12.45 மணியளவில் ரெகாங் பியோ-சிம்லா என்ற நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் பல வாகனங்கள் புதைகுழியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ட்ரக், அரசு பேருந்து இன்னும் பல வாகனங்கள் இதில் சிக்கியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதனால் பலர் இதில் சிக்கியிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இதிலிருந்து மீட்பதற்கு இந்திய-திபெத் எல்லைப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025