இந்தியாவில் 28 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..284 பேர் இறப்பு..!

Less than 28,000 corona victims in India..284 deaths ..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,176 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 284 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,33,16,755  ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 27,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,33,16,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 284 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,43,497 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,012  பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,25,22,171 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,51,087 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 75,89,12,277 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 61,15,690 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.