இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,587 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,97,62,793 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 62,480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட, 4,728 ஆயிரம் குறைவாக உள்ளது.
கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,97,62,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,587 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,83,490 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 89,977 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,80,647ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,98,656பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 26,89,60,399 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.