பெண்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம் !டெல்லி அரசின் அறிவிப்புக்கு ஒப்புக்கொள்ளக்கூடாது-மெட்ரோ மேன் பிரதமருக்கு கடிதம்

பெண்களுக்காக புதிய போக்குவரத்து  திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.அதில், டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் அரசுப்பேருந்துகளில்

பெண்களுக்காக புதிய போக்குவரத்து  திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.அதில், டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் அரசுப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிட்டார்.இலவச பயணத்தை விரும்பாத பெண்கள் டிக்கெட் வாங்கி பயணிக்கலாம் என்றும் தெரிவித்தார்.இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 700 கோடி  டெல்லி அரசுக்கு கூடுதலாக செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  முழு செலவையும் டெல்லி அரசு ஏற்கும் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

unknown node

மெட்ரோ மேன் என அழைக்கப்படும் இ.ஸ்ரீதரன் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில், மெட்ரோவில் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவசம் என சலுகை அறிவித்துள்ள டெல்லி அரசின் அறிவிப்புக்கு ஒப்புக்கொள்ளக்கூடாது  என்று ஸ்ரீதரன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.