போயிங் நிறுவனத்திடமிருந்து இந்திய கடற்படைக்காக இரட்டை என்ஜின்கள் வாங்க முடிவு!

இரட்டை என்ஜின்கள் கொண்ட போர்விமானங்களை இந்திய கடற்படைக்காக போயிங் நிறுவனத்திடமிருந்து  வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது

இரட்டை என்ஜின்கள் கொண்ட போர்விமானங்களை இந்திய கடற்படைக்காக போயிங் நிறுவனத்திடமிருந்து  வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரையிலும் லாக்ஹீட்(Lockheed Martin) மற்றும் சாப் (Saab) நிறுவனங்களே இந்தியாவின் விமான கொள்முதலுக்கான போட்டியில் இருந்தன.

இரு நிறுவனங்களும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ஒற்றை என்ஜின் கொண்ட போர் விமானங்களை தயாரித்து வழங்க ஒப்புதல் தெரிவித்திருந்தன. இந்நிலையில்,  விமான கொள்முதலுக்கான பரிந்துரை பட்டியலில் போயிங் நிறுவனத்தின் இரட்டை என்ஜின் கொண்ட F/A-18 ரக விமானங்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில் சுமார் 58 ஆயிரம் கோடி செலவில் 57 போர்விமானங்கள் வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.