#MaduraiThanksModi ஹேஷ் டாக்கை முந்திய #GoBackModi !!இந்திய அளவில் முதலிடம்

#GoBackModi என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

#GoBackModiஎன்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க ஏப்ரல் 12 ஆம் தேதி  தமிழகம் வந்தார்.அப்போது  பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்#GoBackModiஎன்ற ஹேஷ் டாக் உலக அளவில்   ட்ரெண்டாகியது.

மதுரையில்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்  பிரதமர் நரேந்திர மோடி.இதற்காக  நாளை அவர் தமிழகம்  வருகிறார்.

சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் மீணடும் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து#GoBackModiஎன்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாகி வருகிறது.அதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கும்  வகையில்#MaduraiThanksModiஎன்று ஹேஷ் டாக்கும்  ட்ரெண்டாகி வருகிறது.இந்த இரு ஹேஷ் டாக்குகளும் போட்டி போட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

unknown node

இந்நிலையில் சமூக வலைத்தலமான ட்விட்டரில்#GoBackModiஎன்ற ஹேஷ் டாக்கும்,#MaduraiThanksModiஎன்ற ஹேஷ் டாக்கும்  போட்டி போட்டு ட்ரெண்டாகியது.இறுதியில்#GoBackModiஎன்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் முதலிடத்தில்  ட்ரெண்டாகி வருகிறது.