நம் பாரதியின் எழுத்து இன்னும் சுதந்திரம் பேசும்.. மகாகவியின் மறக்கமுடியாத சில சரித்திர பக்கங்கள்...

சுதந்திர வேட்கையினை மக்கள் மத்தியில் தனது இலக்கியம் மூலம் உயிரூட்டிய நம் மகாகவி பாரதியின் சிறு குறு குறிப்பு.

சுதந்திர வேட்கையினை மக்கள் மத்தியில் தனது இலக்கியம் மூலம் உயிரூட்டிய நம் மகாகவி பாரதியின் சிறு குறு குறிப்பு.

1882ஆம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். தனது பதினோராம் வயதிலேயே கவி பாடும் ஆற்றல் கொண்டதால், பின்னாளில் எட்டயபுரம் மன்னரின் அரசவை கவிஞர் ஆனார்.

unknown node

அவர் வாழ்ந்த காலம் தான் சுதந்திரத்திற்கான போராட்டமும், மக்களுக்கு சுதந்திரம் மீதான வேட்கையும் தலைதூக்க ஆரம்பித்த காலம்.  அப்போது தனது பாடல்கள் மூலம் சுதந்திர வேட்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க பெரிதும் உதவி செய்தார் மகாகவி பாரதியார்.

unknown node

அதேபோல், தமிழ் மொழியை பற்றி இவர் புகழ்ந்து பேசாத நாளில்லை என்றே கூறலாம். ‘யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என தமது தாய் மொழி தமிழை பற்றி உள்ளதை கூறி உயர்த்தி பாடுவார் மகாகவி பாரதி.

பாரதியார் பல்வேறு இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றிலும் புலமை பெற்றிருந்ததால், ஆதலால் பிறமொழி இலக்கியங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கவும் செய்துள்ளார். இவர் பத்திரிக்கை ஆசிரியராகவும், பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

unknown node

‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதைஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்வெந்து தணிந்தது காடு – தழல்வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்’

இந்தப் பாடல் வரிகளே போதும் நமது சுதந்திர வெற்றியை நம்முள் இன்னும் கடத்திச் செல்வதற்கு.. குறுகிய காலத்திலேயே மக்களிடம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாலோ என்னவோ , தனது 39வது வயதிலேயே தன் உயிர் பிரிந்தார் மகாகவி பாரதியார்.

unknown node

ஆனால் இன்னும் அவர் கவிதைகள் தமிழர்கள்  மத்தியில் இருந்துகொண்டே இருக்கும். இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த பாரதியின் தாக்கம் குறையாது.