மத்திய தகவல் ஆணையத்திடம் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதில், வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, கைது நடவடிக்கைக்கு அஞ்சி லண்டனில் தங்கியுள்ள விஜய் மல்லையா வாங்கிய கடன் தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் இல்லை என தெரிவித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்குமாறு மத்திய நிதி அமைச்சகத்திற்கு தலைமைத் தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில், மல்லையா வாங்கிய கடன் தொடர்பான எந்த ஆவணமும் இல்லை என நிதி அமைச்சகம் பதிலளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.