ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்த மம்தா பேனர்ஜி.!

Mamata Banerjee : மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்படுகையில் ஹெலிகாப்டருக்குள் இடறி விழுந்தார்.

Mamtha Banerjee

Mamata Banerjee :மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்படுகையில் ஹெலிகாப்டருக்குள் இடறி விழுந்தார்.

மக்களவை தேர்தல் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பேனர்ஜி இன்று தனது பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் புறப்படுகையில் தவறி விழுந்துள்ளார்.

துர்காபூரில் தனது கட்சி பிரச்சாரத்தை முடித்து கொண்டு, அடுத்தகட்ட பிரச்சாரத்திற்கு செல்ல அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹெலிகாப்டரில் மம்தா ஏறினார். அப்போது நிலை தடுமாறி ஹெலிகாப்டருக்குள் விழுந்துவிட்டார். இதில் அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது உரிய மருத்துவ சிகிச்சை மம்தா பேனர்ஜிக்கு அளிக்கப்பட்டுள்ளது.