கடந்த 20 வருடத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை விஷம் வைத்து கொன்ற நபர் கைது...!

A man has been arrested in Uttar Pradesh for poisoning five members of his family in the last 20 years.

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 20 வருடத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை விஷம் வைத்து கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகனை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சொத்து தகராறு காரணமாக தனக்கு நெருக்கமாக உள்ள சில உறவினர்கள் அவனை கடத்தி உள்ளதாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஹபூர் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளியாகிய புகார் அளித்தவரின் சகோதரர் லீலுவிடம் போலீசார் நடத்தியுள்ளனர். அப்பொழுது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறுவனை நான் தான் கடத்தி, விஷம் வைத்து கொன்று ஆற்றில் உடலை தூக்கி எரிந்து விட்டேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், கடந்த 2001-ஆம் ஆண்டு தனது மூத்த சகோதரரை இதே போல  கொன்றதாகவும், அதன் பின் சில மாதங்களுக்கு பின்பாக அவருடைய 8 வயது மகளை விஷம் வைத்துக் கொன்றதாகவும், மூன்று வருடங்களுக்கு முன்பதாக அவருடைய மூத்த மகளை கொன்றதாகவும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பதாக மூத்த சகோதரரின் மகன் நிஷாவை கொன்றதாகவும் கூறியுள்ளார்.

தனது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் தனது சொத்தை பிரித்து கொடுக்க மனம் இல்லாததால் இவ்வாறு கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து குற்றவாளியின் வாக்குமூலத்தை ஆடியோவாக பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளியை கைது செய்ததுடன் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.