12 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த நபர் கைது...!

A man from Rajasthan has been arrested for raping his 12-year-old foster child.

இராஜஸ்தானை சேர்த்த ஒருவர் தனது 12 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆல்வார் பகுதியில் தனது 12 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்ததற்காகவும், மற்றொரு சிறிய வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்ய முயன்றதற்காகவும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், இரண்டு சிறுமிகள் தனது தந்தை புற்றுநோயால் இறந்து விட்டதான் காரணமாக அவரது தாயாரிடம் இருந்து வந்ததாகவும், ஆனால் அவரது தாயார் குற்றம் சாட்டப்பட்ட நபருடன் உறவில் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

அதன் பின்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிகளின் தாய் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின் தான் அவர்களின் வளர்ப்பு தந்தை 12 வயது மற்றும் 7 வயதுள்ள சிறுமிகளை அவ்வப்போது பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளார். மேலும், 12 வயது சிறுமியை பலாத்காரமும் செய்துள்ளார். இந்த விவகாரம் சிறுமிகளின் தாய்க்கு தெரிந்துள்ளது. எனவே, அந்த சிறுமிகளை தனது சகோதரன் வீட்டுக்கு அந்த பெண்மணி அனுப்பியதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

அதன் பின் சில நாட்களில் அந்த சிறுமிகள் ஒரு விடுதியில் சேர்க்கப்பட்டு இருந்ததாகவும், விடுதியில் உள்ள ஊழியர்களிடம் அந்த சிறுமிகள் இது குறித்து தெரிவித்ததையடுத்து விடுதி ஊழியர்கள் போலீசாரிடம் உடனடியாக புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, 24 மணி நேரத்திற்குள் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். தொடர்ந்தும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.