மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த கலவரத்தில், இரு பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான இரண்டு வழக்குகள் உட்பட 8 வழக்குகளை சிபிஐ இதுவரை பதிவு செய்திருந்த நிலையில், மேலும் 9 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இப்பொது, மொத்த வழக்குகளின் எண்ணிக்கையை 17 ஆக உயர்ந்துள்ளது.
இதனால், விசாரணை மேலும் தீவிரமடையும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணையின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வேறு எந்த வழக்கும் முன்னுரிமையின் பேரில் பரிந்துரைக்கப்படலாம். எனவும், அதன்படி கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என்று இந்த விவகாரத்தில் நெருக்கமாக தொடர்புடைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
